Wednesday, 14 March 2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலை விலங்குகளை நம் உறவினர்களாகச் சித்தரித்து கேலி செய்து மகிழ்ந்திருப்போம். எனக்குப் பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு வேலை தேடி வந்த பின் ஒரு முறை களனியில் (Kelaniya) உள்ள மீன்கள் மற்றும் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று வந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை (2018.03.11) தெஹிவளையில் உள்ள மிருகக் காட்சி சாலைக்குச் சென்று வந்தோம். மனைவி, மகள் மற்றும் உறவுகள் எல்லாம் ஏழு பேர் சென்று வந்தோம்.காலை பதினொன்று முப்பதுக்கு நாங்கள் இருக்கும் மாளிகாவத்தையில் இருந்து 176 ஆம் இலக்க பேரூந்தில் பயணித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தெஹிவளையைச் சென்றடைந்தோம். ஒருவருக்கு தலா நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். உள்ளே நுழைந்ததும் மிருகக் காட்சி சாலையின் வரைபடம் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதில் ஒன்றை எடுத்துக் கொண்டேன். ஆனால் இறுதிவரை அந்த வரைபடத்தின் மூலம் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. வரைபடம் எங்களைக் குழப்பி அலைய விட்டது தான் மிச்சம்.முன்பு எனது பாடசாலை நண்பன் விசு தொழில் நிமித்தமாக இந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தான். தெஹிவளை என்றாலே அவனது நினைவு தான் எனக்கு வரும். அவன் இப்போது யாழ்ப்பாணத்தில் தொழில் புரிகிறான். அவனோடு அரசியல் பேசித் திரிந்த நாட்கள் பல.மிருகக் காட்சி சாலையில் முதலில் கடல் சிங்கம் எங்களை வரவேற்றது. அதற்கு ஒருநாளைக்கு ஒரு தடவை தான் உணவாம். சுமார் மூன்றரை கிலோ உணவு தினமும் மாலை நான்கு மணியளவில் வழங்கப்படுகிறது. டொல்பினை ஒத்திருந்தாலும் இது மீசை வைத்த சிங்கம்.அதற்கு அருகிலேயே மீன் சிகிச்சை நிலையம் காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்த் தொட்டிக்குள் இரு கால்களையும் வைத்துக்கொண்டு சுமார் பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது இதற்கெனவே வளர்க்கப்பட்ட சிறிய அளவிலான மீன்கள் நம் கால்களைக் கடித்து சிகிச்சை அளிக்கும். இதற்கான கட்டணம் இலங்கை ரூபாய் இருநூறு. நாம நல்ல ஆரோக்கியமாத்தானே இருக்கோம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என்று சொல்லி அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தோம்.அடுத்தது நீர் வாழ் உயிர் காட்சி சாலைக்குச் (Aquarium) சென்றோம். விதவிதமான மீன்கள் மற்றும் சில நீர் வாழ் உயிரினங்கள் அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. தொடர்ந்து பாம்பு காட்சி சாலை, கிளிகள் காட்சி சாலை மற்றும் வண்ணத்துப்பூச்சி காட்சி சாலை போன்றவற்றைப் பார்வையிட்டோம். குரங்குகள், மான், யானை, முதலை, ஆமை, கொக்கு மற்றும் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகள் அங்கு காணக்கிடைத்தன.அன்றைய தினம் நாங்கள் காலிமுகத் திடலுக்கும் திரையரங்குக்கும் செல்லத் திட்டமிட்டிருந்ததால் பகல் 12.30 அளவில் மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற நாங்கள் மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து திரும்பினோம். ஆனால் காலிமுகத் திடலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. திரையரங்குக்கு சென்று இலங்கையில் தயாரித்து வெளியிடப்பட்ட 'கோமாளி கிங்ஸ்' திரைப்படத்துக்கு சென்று வந்தோம்.மிருகக் காட்சி சாலையைச் சுற்றிப்பார்க்க ஒருநாள் முழுவதும் வேண்டும். சிலநேரங்களில் அது கூட போதாது என்றே கூற வேண்டும். ஆற அமர ரசித்து சுற்றிப்பார்க்க இரண்டு நாட்களாவது செல்லும்.தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோன் ஹேகன்பேக் என்னும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் பிடிக்கப்பட்ட காட்டு விலங்குகளை ஐரோப்பாவுக்கு அனுப்பும் வரை அடைத்து வைக்கும் ஒரு இடமாக பதினோரு ஏக்கர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டது. இது ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந் நிறுவனம் 1936இல் நஷ்டத்தை எதிர்நோக்கியதால் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.1946இல் தன்னாட்சி அதிகாரமுடைய திணைக்களமாக தெஹிவளை உயிரியல் பூங்கா மாற்றம் பெற்றது. அதன்போது மக்களை மகிழ்விப்பதே திணைக்களத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. 1970 மற்றும் 1980களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முகாமைத்துவ மாற்றங்களின் பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய திறந்த மிருகக் காட்சி சாலையை பராமரிப்பதும் விலங்கினங்களைப் பாதுகாப்பதுமே முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன. தற்போது 21 ஏக்கர் பரப்பளவில் தெஹிவளை மிருகக் காட்சி சாலை செயற்பட்டு வருகின்றது. இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகள் பலவற்றில் தமிழ்க்கொலைகள் தாராளமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.இலங்கையில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையும் ஒன்றாகும். பார்க்க மறந்துடாதீக... அப்புறம் வருத்தப்படுவீக...!தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! - சிகரம்பாரதி 

#078/2018
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! 
https://www.sigaram.co/preview.php?n_id=304&code=gmFQ91xR
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்   

#078/2018/SIGARAMBHARATHILK
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  

Thursday, 8 March 2018

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்

2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் பிப்ரவரி, 2018 ஆம் ஆண்டு 09 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. 15 விதமான விளையாட்டுக்களில் 102 நிகழ்வுகள் இடம்பெற்றன. 100க்கும் அதிகமான பதக்கங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதோ முழுமையான பதக்கப் பட்டியல் (முதல் 10 நாடுகள் மட்டும்)

01 - நோர்வே - 14 தங்கம் | 14 வெள்ளி | 11 வெண்கலம் = 39 பதக்கங்கள் 

02 - ஜெர்மனி - 14 தங்கம் | 10 வெள்ளி | 07 வெண்கலம் = 31 பதக்கங்கள் 

03 - கனடா - 11 தங்கம் | 08 வெள்ளி | 10 வெண்கலம் = 29 பதக்கங்கள் 

04 - ஐக்கிய அமெரிக்கா - 09 தங்கம் | 08 வெள்ளி | 06 வெண்கலம் = 23 பதக்கங்கள் 

05 - நெதர்லாண்ட்ஸ் - 08 தங்கம் | 06 வெள்ளி | 06 வெண்கலம் = 20 பதக்கங்கள் 06 - சுவீடன் - 07 தங்கம் | 06 வெள்ளி | 01 வெண்கலம் = 14 பதக்கங்கள் 

07 - தென்கொரியா - 05 தங்கம் | 08 வெள்ளி | 04 வெண்கலம் = 17 பதக்கங்கள் 

08 - சுவிற்சர்லாந்து - 05 தங்கம் | 06 வெள்ளி | 04 வெண்கலம் = 15 பதக்கங்கள் 

09 - பிரான்ஸ் - 05 தங்கம் | 04 வெள்ளி | 06 வெண்கலம் = 15 பதக்கங்கள் 

10 - ஆஸ்திரியா - 05 தங்கம் | 03 வெள்ளி | 06 வெண்கலம் = 14 பதக்கங்கள் 

பங்குபற்றிய மொத்த நாடுகள் - 30 

வெல்லப்பட்ட மொத்தப் பதக்கங்கள் (307) : 
தங்கம் - 103
வெள்ளி - 102 
வெண்கலம் - 102 

#076/2018
2018/03/09
23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்   
https://www.sigaram.co/preview.php?n_id=302&code=FovLTXny  
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்செய்திகள் #சிகரம்விளையாட்டு #விளையாட்டுமஞ்சரி #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #GOOGLE #GOOGLEDOODLE #WinterOlympics #Pyeongchang2018 
#சிகரம்

Monday, 5 March 2018

கவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்!

அதிகாரம் 61
மடி இன்மை 

***

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)

*****

இழிவும் பழியும்!

*****

எதற்காகப்
பிறந்தோ மென்ற
எண்ணமே
சிறிது மின்றி
வாழ்கையில்
பிடிப்பு மின்றி
வாழ்கின்ற
மனித ரெல்லாம்,

திட்டங்கள்
ஏது மின்றித்
திறமைகள்
சிறிது மின்றி
சோம்பியே
கிடந்து நித்தம்
சோற்றுக்காய்
வாழு வோர்கள்,இனம்மொழி
உணர்வு மின்றி
அறிவதில்
விருப்ப மின்றி
உயிரிலாப்
பிணம்போ லிங்கு
உலவியே
வருகின் றோர்கள்,

இடித்துமே
பலரும் பேச
இகழ்ந்துமே
காரித் துப்ப
நேர்ந்திடும்
சிறுமை யென்று
நெற்றியில்
அடித்துச் சொன்னான்,

தாம்பெற்ற
பிள்ளை யிங்கே
தாழ்ந்திடல்
ஆகா தென்று
தன்நெஞ்சில்
நினைத்த தாலே
தந்தைநூல்
எழுதி வைத்தான்! 

****

இடிபுரிந்து - மற்றவர்களுடைய கடுஞ்சொல்லைக் கேட்க நேர்ந்து.

எள்ளும்சொல் - மதிப்பிழக்கவைக்கும் சொற்கள்.

மடிபுரிந்து - சோம்பலைத்தன் சொத்தாகக்கொண்டு.

உஞற்றுஇலர் - முன்னேற வேண்டுமென்ற முயற்சி இல்லாதவர்கள்.

***

மானம்பாடி புண்ணியமூர்த்தி 
12.02.2018

எனதருமை செல்வங்களே...
மனிதப்பிறப்பு மகத்தானது, மண்ணில் தோன்றிய பிறஉயிர்கள் அனைத்திற்கும் மேலானது, இதை உணராது விலங்குகளைவிட கீழாக சிலர் வாழ்கின்றார்களே!
நாமென்ன அப்படியா? இல்லவே இல்லை!
சாதிப்போம் சரித்திரம் படைப்போம், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை!
வெற்றிநமதே!
என்றும் உங்களுக்காக...
மானம்பாடி புண்ணியமூர்த்தி

#075/2018
05/03/2018
கவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்!
https://www.sigaram.co/preview.php?n_id=301&code=0bspcMYn
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்

Sunday, 4 March 2018

எழுவாய் தமிழே!

எழுவாய் தமிழே!
தன்மையாய் முன்னிலை 
வகித்து-உந்தன்
படர்க்கை விரித்திடு!

இலக்கணம் வகுக்கத்தொல் 
காப்பியங்களும்
ஈரடியில்திருக் குறளும்,
நாலடியாய் பாக்களும்,

இன்பம்கொள்ள கலித் தொகையும்,
ஐந்திணை விளங்க நற்றிணையும் 
சிறிதுபெரிதென குறுந்தொகையும்,
ஐங்குறுநூறாய் பதிற்றுப்பத்தாய்ஓங்கிஒலிக்கும் பரி பாடலுடன்
அகம் புறமென விரு
நானூறு பாவகையும்,
எத்தனை யெத்தனை
ஆற்றுப்படைகள் அம்மம்மா!

சிலம்புகளில் அதிகாரமாய்,
மணிகளில் கண்டேன்
மேகலைகள் அந்த
சீவகனுக்கோ சிந் தாமணி
எவர்க்கும்
வளையா பதியாய்
காதிருக் குண்டல கேசியெனும்

ஐம்பெரும்
காப்பியங்கள் அழகழகாய் 
எட்டுத்தொகை நூல்களும்
மூவாறுமேன் கணக்கு நூல்களும்
மூவாறுகீழ் கணக்கு நூட்களு மின்னும்

இயைந்ததெல்லாம் இலக்கியமாய் 
இடையிடையே இலக்கணமாம்!
அறம்வளர்க்க மொருநூலும்,
அகமுரைக்க வொருநூலும்,

மறம் வளர்க்க வொருநூலு மனி 
தமுரைக்க வொருநூலும்,
அடுத்த நற்கெல்லாம் இலக்கணங்கள் 
அனைத்தையு முரைக்கும் இலக்கியங்கள்,

மருத்துவ மென்றால்
அதிலுண்டு மாயப் புதுமை
அறிவியல் வெகுவுண்டு,
வானிலை சாத்திரம்
உலகுரைப்போம் நாங்கள்
வாழ்நிலை பக்தியை
யதில் வளர்ப்போம்!

அணுக்களின் நகர்வை யுரைத்திடுவோம்,
அண்டங்கள் கடந்து
படர்ந்திடுவோம்!
சிறகுகள் வேண்டாம்
விரைந்திடுவோம் சிந்தனை
யதிலே பறந்திடுவோம்!

#074 2018/03/05
எழுவாய் தமிழே!  
https://www.sigaram.co/preview.php?n_id=300&code=HKV1kXgh 
பதிவர் : கவின்மொழிவர்மன் 
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM 
#சிகரம்  

Saturday, 3 March 2018

கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!

அதிகாரம் 66
வினைத்தூய்மை 

******

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாம் தரும் 
(குறள் 651)

******

நற்றுணையும்
நற்செயலும்!

***

அறிவினில்
உயர்ந்தோர் தன்னை
அலசிநாம்
தேர்வு செய்து
நட்பதாய்க்
கொண்டு வாழ்ந்தால்
நமக்கென்றும்
குறையே இல்லை,

என்னுடை
வாழ்க்கை தன்னில்
இருபெரும்
நண்பர் வாய்த்தார்
சுப வீர
பாண்டி நட்பும்
கவிச்சுடர்
பித்தன் நட்பும்இருவரின்
துணையி னாலே
இன்றுநான்
வெளியில் வந்தேன்
எனக்குள்ள
ஆற்றல் சேர்த்து
இயன்றதைச்
செய்யக் கற்றேன்,

நல்லதோர்
துணையி னோடு
நாமுமே
முயற்சி செய்தால்
முடியாத
செயலைக் கூட
முடித்துநாம்
வெற்றி காண்போம்,

வினையெனில்
செயல தாகும்
துணையெனில்
நல்ல நட்பாம்
இரண்டும்நம்
வாழ்வில் சேர்ந்தால்
எதிலுமே
வெற்றி யென்றான்!

*****

ஆக்கம் - வெற்றி, உயர்வு.

வினைநலம் - நற்செயல்.

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி ,
22.02.2018.

#073   
2018/03/04
கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!    
https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3  
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


சிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017

வணக்கம் சிகரம் இணையத்தள வாசக நண்பர்களே! சிகரம் இணையத்தளம் 2017/07/01 முதல் செயற்பட்டு வருகிறது. சிகரம் இணையத்தளத்தில் ஆரம்பம் முதல் வெளியான பதிவுகளை வாசிக்கத் தவறியோர் மீண்டும் அப்பதிவுகளை வாசிக்கவும் புதிய வாசகர்கள் பழைய பதிவுகளை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் முகமாக இச்செய்திமடல் உங்கள் கரம் சேர்கிறது. உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்!

சிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017  
#001/2017
2017.07.01
சிகரம் - ஆசிரியர் பக்கம் - 01
https://www.sigaram.co/preview.php?n_id=56&code=foMN450h
பதிவு : சிகரம்
#சிகரம் #முதல்பதிவு #SIGARAM #SIGARAMCO #firstpost #editorial #ஆசிரியர்பக்கம்
#சிகரம்


#002/2017
2017.07.01
சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31
https://www.sigaram.co/preview.php?n_id=55&code=gvrY73Vq
பதிவு : சிகரம்
#சிகரம் #பணிக்கூற்று #சிகரம்2017 #SIGARAM #SIGARAMCO #SIGARAMVISION
#சிகரம்


#003/2017
2017.07.02
சிகரம் பணிக்கூற்று - 2006.06.01 - 2017.06.30
https://www.sigaram.co/preview.php?n_id=57&code=HDgNt4pU
பதிவு : சிகரம்
#சிகரம் #பணிக்கூற்று #சிகரம்2006 #SIGARAM #SIGARAMCO #SIGARAMVISION
#சிகரம்


#004/2017
2017.07.02
இன்பத் தமிழ்
https://www.sigaram.co/preview.php?n_id=58&code=eZdmIuXb
பதிவர் : பாரதிதாசன்
#சிகரம் #தமிழ் #கவிதை #பாரதிதாசன் #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #BHARATHIDHASAN
#சிகரம்


#005/2017
2017.07.02
யார் அவன்?
https://www.sigaram.co/preview.php?n_id=59&code=JvxiO9b8
பதிவர் : கிருத்திகா
#சிகரம் #கவிதை #தமிழ் #SIGARAM #SIGARAMCO #SIGARAMPOEMS #TAMILPOEM
#சிகரம்
#006/2017
2017.07.02
கவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு
https://www.sigaram.co/preview.php?n_id=60&code=U2WMPVN4
பதிவர் : பாலாஜி
#சிகரம் #கண்ணதாசன் #இலக்கியஆய்வு #தமிழ் #SIGARAM #SIGARAMCO #KANNADASAN #TAMIL
#சிகரம்


#007/2017
2017.07.02
விடம் தவிர்
https://www.sigaram.co/preview.php?n_id=61&code=V8F76Gfk
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #THAMIZH
#சிகரம்


#008/2017
2017.07.02
கல்விச்சாலை
https://www.sigaram.co/preview.php?n_id=62&code=zfEke3rJ
பதிவர் : பாலாஜி
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்


#009/2017
2017.07.02
விதியின் பிழையதுவோ?
https://www.sigaram.co/preview.php?n_id=63&code=cYAuL8Qt
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்


#010/2017
2017.07.02
நீ ஒருத்தி மட்டும் தானே !
https://www.sigaram.co/preview.php?n_id=64&code=b1hS8xjP
பதிவர் : பாலாஜி
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம் 

சிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் எமது அன்பான வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS 

-சிகரம்