கானல் நீர்

உன்னை
எவ்வளவு முறைதான்
காதலிப்பது...

காதலித்து
காதலித்து
சலித்துவிட்டேன்...

ஆனாலும்
தீரவேயில்லை
உன்மீதான
என் காதல்...

நீயேன்
இப்படியிருக்கிறாய்
எதுவுமே
சொல்லாமல்...

ஆனால்
உணர்ந்தவாறே
நான்...

உன் ஒளிப்படத்தைப்
பார்த்துக்கூட
கொஞ்சியதில்லை
நான்!
கண்ணியம் காக்கிறேனாம்...ஆனாலும்
தினமும்
உன்
ஒளிப்படத்திடம்
கெஞ்சியபடியே
நான்...

ஒவ்வொரு
படத்திலும்
நீ
புன்னகைக்கிறாய்...

திகிலடைகிறேன்
நான்
காதல் கைகூடுமா
என...

உனதுகுரல்
என் காதுகளில்
இசையாய்
அல்ல
இம்சையாய்
ஒலித்தபடியே...

எவ்வளவு எவ்வளவு
அழகான பெண்கள்
கடக்கும்போதெல்லாம்
அவளைப் போல்
இவளில்லை
எனவே
எண்ணுகிறது
என் மனது...

காதலாய்
கானல் நீராய்
வாழ்க்கை
முழுதும் நீ!
தீராக் காதல்
தாகத்தில்
நான்...⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்!

Comments