Saturday, 30 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து!

பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடையே அக்டோபர் முதலாம் திகதி பிக்பாஸ் ஹிந்தி - பருவம் 11 துவங்கவுள்ளது. இதன் காரணமாகத்தான் பிக்பாஸ் தமிழ் மூன்று நாட்கள் முன்னதாக முடிக்கப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது.

பிக்பாஸ் இறுதி வாரத்துக்குள் ஐந்து போட்டியாளர்கள் கால் பதித்தனர். சினேகன், கணேஷ், ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து ஆகியோரே அந்த ஐந்து போட்டியாளர்கள் ஆவர். இறுதிப்போட்டிக்கு நால்வர் மட்டுமே தெரிவாக முடியும் என்னும் நிலையில் வாரத்தின் இடை நடுவில் ஒருவர் வெளியேறுவார் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.வழமையாக மக்கள் வாக்குகளால் வெளியேறுபவர் கமல் முன்னிலையிலேயே வெளியேறுவார். போட்டியாளர்களும் சனிக்கிழமையன்றே வெளியேற்றம் நிகழும் எனக் கருதினார்கள்.

ஆனால் வித்தியாசமாக யோசித்த பிக்பாஸ் நள்ளிரவு ஒரு மணிக்கு பிந்துவை வெளியேற்றினார். கண்ணீருடன் விடைபெற்றார் பிந்து. போட்டியாளர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகு நேரமானது. புதன்கிழமை அத்தியாயத்தில் வெளியேறினார் பிந்து மாதவி!

சனிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சினேகன், கணேஷ், ஆரவ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Friday, 29 September 2017

மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை!

இலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் கடந்த 2015.05.13 அன்று பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின் செப்டெம்பர் 27இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கு மூன்று தமிழ் நீதிபதிகள் அடங்கிய குழுவினால் யாழ் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோரின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால்,
செப்டெம்பர் 27இல் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (2வது சந்தேகநபர்), பூபாலசிங்கம் தவக்குமார் (3வது சந்தேகநபர்), மகாலிங்கம் சசிதரன் (4வது சந்தேகநபர்), தில்லை நாதன் சந்திரதாசன் (5வது சந்தேகநபர்), பெரியம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் (6வது சந்தேகநபர்), ஜெயநாதன் கோகிலன் (8வது சந்தேகநபர்) மற்றும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் (9வது சந்தேகநபர்) ஆகிய ஏழு பேருக்கும் மரண தண்டனை மற்றும் 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இருவர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  
அத்துடன் 2ம், 3ம், 5ம், 6ம் சந்தேகநபர்கள் வன்புணர்வு மற்றும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனவும், 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், 8ம், 9ம் சந்தேகநபர்கள் வன்புணர்வுடன் மட்டும் தொடர்புடையவர்கள் எனவும், நீதிபதி சசி மகேந்திரன் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் ஏழு பேரும் உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா (பத்து இலட்சம்) நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
   
சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குற்றவாளிகள் ஏழு பேருக்கும் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு சவூதி அரேபியாவைப் போல் பொதுமக்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளின் மேன் முறையீடு நீதி தேவதையை தூக்கிலிடாமல் இருக்கட்டும். மாணவி வித்தியாவின் ஆன்மா சாந்தி அடைவதாக.

#VithyaCaseJudgement #Vithya #Rape #Murder #LK #SriLanka #குற்றம்

Tuesday, 26 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு!

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:
01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :
04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்
13. வையாபுரி  
14. சுஜா 
          முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் :

15. சினேகன்
16. கணேஷ்  
17. ஆரவ் 

புது வரவுகள்:
   
18. ஹரிஷ்
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்தவர்கள் :
(11ஆம் வாரம் வெளியேறினர்)

* ஜூலி
* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருந்தனர்)
  
வாரம் 14 - வெற்றிக்கான போட்டியாளர்கள் :
#ஆரவ் 
#கணேஷ் 
#பிந்து
#ஹரிஷ்
#சினேகன் 

//

வாக்களிப்பு முறை:
   
# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'
  
அல்லது 
  
''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.
  
ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது.
   
இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.

# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.
இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். ஒரு வாக்காளருக்கு பத்து வாக்குகள் மட்டுமே வழங்கப்படும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 14 )
ஆரவ்            : 7210122301
கணேஷ்       : 7210122304
பிந்து             : 7210122316
ஹரிஷ்         : 7210122318
சினேகன்      : 7210122313

முக்கிய குறிப்பு : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகவே இனி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்காகும். ஆகவே நன்கு சிந்தித்து தகுதியானவருக்கு வாக்களியுங்கள்!

வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :
வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 - வெளியேற்றம் இல்லை ( சுஜா போலியாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் )
வாரம் 12 - வையாபுரி
வாரம் 13 - சுஜா 
வாரம் 14 - ???
வாரம் 15 - வெற்றியாளர்வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? சனிக்கிழமை செப்டெம்பர் 30 அன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO


பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய வாக்களியுங்கள் - BIGG-BOSS-TAMIL-VOTE-FOR-WINNER!

பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25,2017 இல் ஒளிபரப்பாகத் துவங்கியது. பதினான்காம் வாரமான இவ்வாரத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளது. செப்டெம்பர் 30 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு மாபெரும் இறுதிப்போட்டி ஒளிபரப்பாகவுள்ளது. 
 
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 15 போட்டியாளர்கள் களமிறங்கினர். நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்கள் கடந்த பின்னர் மேலும் 04 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். பதினான்காம் வாரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் 05 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இவ்வார நடுப்பகுதியில் வெளியேற்றப்படுவார். இறுதிப்போட்டிக்கு நால்வர் மட்டுமே தகுதி பெறுவர்.
 


கவிஞர் சினேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால் அவரே வெற்றியாளர் அல்ல. மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரே பிக்பாஸ் பட்டத்தை வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆவார். தற்போது பிக்பாஸ் இல்லத்தில் சினேகனுடன் கணேஷ், ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து ஆகியோர் உள்ளனர். 

பல்வேறு இணையத்தளங்களில் வாக்களிப்புகள் நடத்தப்பட்டாலும் கூகிளின் மூலம் நீங்கள் நேரடியாக அளிக்கும் வாக்கு மட்டுமே வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறாமல் உண்மையை சரிபார்த்து வாக்களியுங்கள்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி பிக்பாஸ் இல்லத்தை விட்டுப் பிரிவது மனதுக்கு கஷ்டமாகவே இருக்கும். ஆனால் எதற்கும் முடிவு உண்டல்லவா? உங்கள் வாக்களிப்பை ஆரம்பித்து விட்டீர்களா? உங்கள் அபிமான வெற்றியாளர் யார்? முடிவு சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு. காணத்தவறாதீர்கள்!

Sunday, 24 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே! #BiggBossTamil

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி செப்டெம்பர் 24 ஆம் திகதியோடு நிறைவுபெற்றுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. 

பிக்பாஸ் இல்லத்தின் 13 ஆம் வாரத்துக்கான வெளியேற்றத்தில் சினேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வான காரணத்தால் அவரைத் தவிர மற்ற ஐந்து பேரும் பிக்பாஸினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.இந்த ஐந்து பேரில் கணேஷ் மற்றும் சுஜா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தனர். சினேகன் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வான காரணத்தால் பதின்மூன்றாம் வாரத்தின் இறுதிப் போட்டிக்கான சவால்களின் மூலம் தான் பெற்ற மதிப்பெண்களைக் கொடுத்து சுஜா மற்றும் கணேஷ் ஆகிய இருவரில் ஒருவரைக் காப்பாற்றலாம் என கமல் அறிவித்திருந்தார்.

பல கலந்துரையாடல்களுக்குப் பின் சினேகன் கணேஷைக் காப்பாற்றுவதாக கமலிடம் தனது முடிவை அறிவித்தார். ஏற்கனவே போலியாக வெளியேற்றப்பட்டிருந்ததாலும் பதின்மூன்றாம் வாரத்தின் சவால்களில் கடுமையாக நடந்து கொண்டதாலும் சுஜாவின் பிரிவு யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.

பிக்பாஸ் மேடையில் காயத்ரிக்கு வழங்கப்பட்டது போல சுஜாவைக் கேள்வி கேட்கும் வாய்ப்பையும் மக்களுக்கு வழங்கினார் கமல். கண்ணீருடன் விடைபெற்றார் சுஜா.

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

தலைவன் இருக்கிறான் வாடா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதலாம் பருவத்தில் கவிஞர் சினேகன் கலந்துகொண்டுள்ளார். அவர் 13 ஆம் வாரத்தின் சனிக்கிழமை அத்தியாயத்தின் போது கமலஹாசனை சந்தித்த சந்தர்ப்பத்தில் கமலின் அடுத்த திரைப்படமாகக் கருதப்படும் 'தலைவன் இருக்கிறான்' திரைப்படத்திற்காக பாடல் ஒன்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். கமலின் அனுமதியுடன் பாடல் வரிகளை பாடிக் காட்டினார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே:வாடா தோழா வாடா 
தலைவன் இருக்கிறான் வாடா
நம்மை நாமே சரி செய்வோம் ( 2 )
இன்றே புதியதோர் விதி செய்வோம்
என்றோ தொடங்கிய சத்திய சோதனை
இன்றும் தொடருது புரிகிறதா?
வாய்மொழி இருந்தும்
தாய்மொழி இருந்தும்
உண்மையைப் பேச முடிகிறதா?
பணந்தான் இந்த ஜனநாயகத்தை
பங்குப் போட்டு விக்கிதுடா
பாவமய்யா நம்
பாரத தேசம்
அகதியைப் போல
நிக்கிதுடா
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !
அரசியல் என்பது சாக்கடையில்லை
புனித நீர் என்று சொல்லலாம்
கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட
புரட்சி விதையை ஊட்டலாம்
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !
மாற்றம் வேண்டுமா தோழா?
தலைவன் இருக்கிறான் வாடா !

இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என நம்புவோம். இப்பாடலும் இத்திரைப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.


பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
  
விதிமுறைகள்:
  
* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 

 

இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

90 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 06 ) :

சுஜா - 63
சினேகன் - 53
கணேஷ் - 52
பிந்து - 45
ஹரிஷ் - 40
ஆரவ் - 37 


89 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 05 ) :
சுஜா - 58
கணேஷ் - 52
சினேகன் - 48
பிந்து - 40
ஆரவ் - 37
ஹரிஷ் - 23

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :
  
ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) :
  
கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03
  
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

மீண்டும் நான்சாண் ஏற
முழம் சறுக்குமென்பார்
ஆனால்
சாணும் சறுக்க
முழமும் சறுக்கும்
என் வாழ்வில்

எத்தனையோ முயற்சிகள்
அத்தனையிலும் தோல்விகள்
ஆனாலும்
வெற்றித்திருமகளின் கரம்
பற்றத் துடிக்கிறது மனம்
அவள் மீது
நான் கொண்ட காதல்
தீரவில்லை இப்போதும்
என்றேனும்
அவள் நெற்றி மீது
முத்தமிடுவேன் என
உரைத்துக் கொண்டேயிருக்கிறது
என் மனம்

தோல்விகள்
தந்த வலிகள்
என்னை
உருக்குலைத்துவிடவில்லை
தேர்ந்த
சிற்பக்கலைஞனின்
நுணுக்கத்துடன்
என்னைச்
செதுக்கியிருக்கின்றன

சிற்பம்
முழுமை பெறும் நாளில்
என் எதிரிகள்
தன் தோள்களில்
என்னைத் தாங்க
உங்கள் முன்
வலம் வருவேன்
நான்!

Saturday, 23 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable #BiggBossTamilUpdate

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
விதிமுறைகள்:
* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
 

இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

89 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 05 ) :
சுஜா - 58
கணேஷ் - 52
சினேகன் - 48
பிந்து - 40
ஆரவ் - 37
ஹரிஷ் - 23

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :
ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) :
கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

Thursday, 21 September 2017

பிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்! விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு! #BiggBossTamilFinal

பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. ஜூன் 25 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிக்பாஸ் இன் இறுதி நாளாக அக்டோபர் இரண்டாம் திகதியே அமைகிறது.

இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் 'தமிழ்க் கடவுள் முருகன்' என்னும் தொலைக்காட்சித் தொடர் பிக்பாஸ் ஒளிபரப்பு நேரமான இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஆகவே அக்டோபர் முதலாம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விஜய் தொலைக்காட்சி செப்டெம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக்க தீர்மானித்துள்ளது. ஆகவே கணக்குப்படி 97 ஆம் நாளில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 

முதல் நாள் நிகழ்வுகளைத் தொகுத்து அடுத்த நாள் காட்டுகிறார்கள் என்பது தான் நம் கருதுகோள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறதா என்னும் சந்தேகம் இங்கு எழுகிறது.

பிக்பாஸ் இறுதிப்போட்டி வீட்டுக்குள்ளேயே நடைபெறுமா அல்லது பிரம்மாண்ட மேடையில் நடைபெறுமா என்பது குறித்து தகவலில்லை. எது எப்படியிருந்த போதிலும் பிக்பாஸ் வெற்றியாளருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

ஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா

இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் குறித்த உத்தியோகபூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

ஜனவரி-05, 2018 இல் ஆரம்பமாகும் கிரிக்கெட் தொடர் மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகளை உள்ளடக்கும்.

முன்னதாக டிசம்பரில் இலங்கையுடன் மோதும் இந்தியா தொடர் முடிவடைந்த பின் டிசம்பர் 28 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு செல்லும். அங்கு இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் ஈடுபடும்.பாக்ஸிங் டே கிரிக்கெட் ( Boxing Day Cricket ) என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிக்காக தென்னாபிரிக்க அணி சிம்பாப்வே அணியைத் தேர்வு செய்துள்ளது. இது நான்கு நாள் கொண்ட இரவு-பகல் டெஸ்ட் போட்டியாக இடம்பெறும்.

தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி தொடர்ந்து அக்டோபரில் நியூஸிலாந்துடனும் பின்னர் இலங்கையுடனும் விளையாடும். 2018 இல் தென்னாபிரிக்க தொடருக்குப் பின் இலங்கைக்கு முக்கோண இருபது-20 கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வருகிறது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

#INDvsRSA #INDvSA #INDvsSL #INDvsAUS #BCCI #CSA #ICC #BoxingDay

Wednesday, 20 September 2017

புரியாத புதிர்

ஆர்ப்பரிக்கும்
அலை கடலென
அலைபாய்கிறது மனம்
எழுத்திலும்
சொல்லிலும்
சொல்லிவிட முடியவில்லை
என் உணர்வுகளை...   

மொத்தமும் அழிந்து போய்
சொச்சமாய் மிச்சமிருக்கும்
வரலாற்றுச் சின்னங்களைப் போல்
என் மனதுக்குள்ளும்
ஆங்காங்கே சில
நினைவுகள்
கவனிப்பாரின்றிக்
கிடக்கின்றன...

எண்ணத்தில் உள்ளது
எந்த இறைவனுக்கும்
புரிவதில்லை
வார்த்தைகளில் சொன்னால்
மனிதர்களுக்கும் புரிவதில்லை...⁠⁠⁠⁠
அண்டம் உருவாகி
ஆயிரங்கோடி
ஆண்டுகளாகியும்
அடங்கவில்லை
அலைகடலின் சீற்றம்
அதுபோல்
இறந்த பின்னும்
அடங்கப்போவதில்லை
என் மன அலைகளும்...

கடவுளைப் போலவே
யாருக்கும் புரியாத
புதிராய்
இருந்துவிட்டுப்
போகட்டும்
என்
எண்ணங்களும்...⁠⁠⁠⁠                   

இப்படைப்பு கவிஞர் சிகரம் பாரதி அவர்களின் படைப்பாகும்!

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
விதிமுறைகள்:
* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :
ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) :
கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

Tuesday, 19 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:
01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :
04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்
13. வையாபுரி 

முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் :

14. ஆரவ் 
15. சினேகன்
16. கணேஷ் 

புது வரவுகள்:
17. ஹரிஷ் 
18. சுஜா வருணி 
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்தவர்கள் :
(11ஆம் வாரம் வெளியேறினர்)

* ஜூலி
* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருந்தனர்)
  
வாரம் 13 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
#ஆரவ் 
#கணேஷ் 
#பிந்து
#ஹரிஷ்
#சுஜா 

// பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் இவ்வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றும் நபர்களைப் பரிந்துரைக்கவில்லை. பிக்பாஸ் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி கொண்ட சினேகனைத் தவிர மற்றைய ஐந்து போட்டியாளர்களையும் வெளியேற்றத்திற்காக பரிந்துரைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவ்வாரம் நடக்கும் போட்டிகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுபவர் நேரடியாக பிக்பாஸினால் காப்பாற்றப்படுவார். //

வாக்களிப்பு முறை:
   
# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'

அல்லது 

''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.
ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது.
இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.
# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.
இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். ஒரு வாக்காளருக்கு பத்து வாக்குகள் மட்டுமே வழங்கப்படும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 13 )
ஆரவ்           : 7210122301
கணேஷ்       : 7210122304
பிந்து            : 7210122316
ஹரிஷ்        : 7210122318
சுஜா             : 7210122319

முக்கிய குறிப்பு : நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஒரு போட்டியாளரைக் காப்பாற்ற அளிக்கும் வாக்காகும். அதாவது நீங்கள் யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்களோ அவருக்கு / அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வெளியேற்ற நினைக்கும் நபருக்கு வாக்களிக்கக் கூடாது. விருப்பு வாக்கு ஒழுங்கின்படி இறங்கு வரிசையில் உங்கள் முதன்மைப் பட்டியலின் அடிப்படையில் வாக்களியுங்கள்!

வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :
வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 - வெளியேற்றம் இல்லை ( சுஜா போலியாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் )
வாரம் 12 - வையாபுரி
வாரம் 13 - ???
வாரம் 14 - ???
வாரம் 15 - வெற்றியாளர்


வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

Monday, 18 September 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுரி வெளியே!

பிக்பாஸ் தமிழின் பன்னிரண்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டுக்கான (Golden Winning Ticket) வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வாரத்தில் இடம்பெற்ற தங்கத் துருப்புச் சீட்டுக்கான போட்டிகளின் புள்ளிப் பட்டியலின் படி சினேகன் முதலிடத்தைத் தட்டிச் சென்றார். ஆகவே சினேகன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் இறுதிப் போட்டிக்குத் தேர்வான முதல் போட்டியாளராகவும் சினேகன் மாறியுள்ளார். 
கமல் அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து நேரடியாக தங்கத் துருப்புச் சீட்டை சினேகனுக்கு வழங்கி வைத்தார். ஆரவ் இரண்டாவது இடத்தையும் பிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கமல் போட்டியாளர்களுடன் சுவாரசியமாக உரையாடினார். இன்று வெளியேறுபவரையும் கமல் கையோடு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மேடைக்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.

ஆரவ், சினேகன், வையாபுரி மற்றும் ஹரிஷ் ஆகிய நால்வரே இவ்வாரத்துக்கான வெளியேறும் போட்டியில் இருந்தனர். இவர்களுள் ஹரிஷ் சனிக்கிழமை அத்தியாயத்தின் மூலம் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி கொண்டதன் மூலம் காப்பாற்றப்பட்டார். மீதமிருந்த இருவரில் வையாபுரி வெளியேறுபவராக அறிவிக்கப்பட்டார். ஏனைய போட்டியாளர்களைப் போலல்லாது வையாபுரிக்கான விடைபெறும் குறும்படம் வீட்டிலுள்ள அனைவரின் முன்னிலையிலும் காண்பிக்கப்பட்டது சிறப்பு.
குறும்படத்தின் போது சிறிது கண்கலங்கிய வையாபுரி அதன் பிறகு கண்ணீர் சிந்தவேயில்லை. இந்த முடிவை அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். பிக்பாஸ் வீட்டின் ஏனைய உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர். அவர்களைப் போலவே நாமும் வையாபுரியின் நகைச்சுவை கலாட்டாக்களை நிச்சயம் தவற விடுவோம் என்பது மட்டும் உண்மை!
#BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

Sunday, 17 September 2017

பிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இறுதிப்போட்டியா? #BiggBossTamilFinal

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது மிக வெற்றிகரமாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்களைக் கொண்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பன்னிரெண்டாம் வாரத்துக்கான வெளியேற்றத்திற்குப் பின் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் எஞ்சியுள்ளனர். 

வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றிகொண்டதன் மூலம் சினேகன் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கான வெளியேற்றத்தின் மூலம் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். மீதமிருக்கும் மூவர் இறுதிப் போட்டியில் சினேகனுடன் பங்கு கொள்வார்கள். சினேகன், கணேஷ், ஹரிஷ், ஆரவ், சுஜா மற்றும் பிந்து ஆகிய ஆறு போட்டியாளர்களே தற்போது போட்டியில் உள்ளனர்.இறுதிப்போட்டி எப்போது நடைபெறும், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அறிய மக்கள் மிக ஆர்வமாக உள்ளனர். தற்போது அது குறித்த சிறிய தகவலொன்று நம் கைக்குக் கிட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த தினத்துடன் பார்க்கும் போது அக்டோபர் மூன்றாம் திகதி செவ்வாயன்று தான் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும். ஆனால் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நேரமான இரவு ஒன்பது மணிக்கு 'தமிழ்க் கடவுள் முருகன்' என்னும் பக்தி நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகவே அக்டோபர் ஒன்றாம் திகதி பிக்பாஸ் இறுதிப்போட்டி நடைபெறும் என ஊகிக்க முடிகிறது. அப்படியானால் பிக்பாஸ் 98 நாட்களோடு முடிந்து விடுமா? அல்லது இரண்டு நாட்களுக்கான ஒளிப்பதிவுகளை கையில் வைத்துக் கொண்டு விஜய் தொலைக்காட்சி மக்களை ஏமாற்றுகிறதா? விடை பிக்பாஸுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் மட்டுமே தெரியும். கமலுக்கும் கூட தெரிந்திருக்கலாம்!

#BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

முகிலும் மயிலும்

ஆதவன் உறங்கியிருக்க
அம்புலியோ விழித்தெழுந்திட...
அகண்ட  வெளியில்
அலங்காரமாயொரு மேடை...

விளக்கின் ஒளியோ
விடியலாய் சொலித்திட...
நடுவில் நாயகனாய்
நாராயணன் சிலையாய் நின்றிருக்க...

பார்த்த கண்களோ
பாரை மறந்திட...
பூமியும் ஆனதே
பூலோக வைகுண்டமாய்..

அழகானதொரு நாட்டியம்
அரங்கேறியதே அம்மேடையில்...
பரம்பொருளின் அவதாரத்தைப்
பரதத்தில் எடுத்துரைக்க...

பார்த்த நானோ
பார்த்தனிடமே சென்றிட...
இடையில் தத்தகாரம்
இனிமையாய் ஒலித்திட...

இமைக்காத விழியோ
இசைத்தவள் பக்கம் ஈர்த்திட...
சோழன் வார்த்தெடுத்த
சிலையாய் அங்க அழகும்...

முழுநிலவாய் பிரகாசிக்கும்
முக அழகும்...
முகில் கிழித்து
முகம் காட்ட வந்த

முழுமதியோ நாணி
முகமறைத்து சென்றிட...
தேற்றிட ஆளில்லாமல்
தேய்ந்தும் போய்விட...

வருவாளோ நடனம்
புரிவாளோ என்று
மனமேங்கி அமர்ந்திருக்க...
மெதுவாய் நோக்கினாள்...

நோக்கும் நேரத்தில்
நோக்காமல் நோக்கா
நேரத்திலெனை நோக்கி
நோகடித்தினாள் கடைவிழியால்...

கண்ணணின் கதையை
காவியமாக்கினாள் பரதத்தில்
கண்ணெதிரே நிறுத்தினாள்
குருவின் ஆசியோடு...

செங்கதிர் தெறிக்கும்
செம்முகத்தாள் சுட்டெரித்தாள்...
உடலை விட்டு
என்னை இழுத்தாள்...

முத்திரை பிடிக்கும்
விரலின் இடுக்கில்
என்னை அடக்கி
அணைத்துக் கொண்டாள்...விழிக்குள் என்னை
விதையாய் புதைத்துக் கொண்டாள்...
நீந்திக் களித்தேன்
நீளவிழியில் நானே...

வெளியின் நிலவாய்
கருவிழி இரண்டும்
அங்குமிங்கும் அசையும்...
அழகில் சொக்கி நின்றேன் ...

சிலாகித்துப் போனேன்...
சிலிர்த்து விழுந்தேன்...
இமையால் வருடி
இதயத்தினுள் அமர்த்தினாள்...

ஆசனமிட்டு அமர்கையில்
ஆடலின் துள்ளலில்
தெறித்து விழுந்தேன்
எதிரிலிருக்குமென் உடலினுள்...

உயிர்பெற்று எழுந்தேன்...
கருவறை சென்று
மீண்டும் திரும்பினேன்...
முகுந்தனாய் நின்றாள்

குழலூதி எதிரில்...
கண் அசையாது...
கருவிழியும் அசையாது...
அவளை மட்டும் பார்த்தேன்...

அவளின் தாசனானேன் ...
சலங்கை ஒலியும்...
காற்றிலாடும் சிமிக்கியும்...
மார்பின் மேலாடும்

தங்க நகையும் அதில்
தகிக்கும் வைரமும்...
மோகனப் புன்னகையும்...
மனதை மயக்கிட...

மயில் தோகையணிந்து
மாயவனாய் ஆடினாள்...
தோகை விரித்த மயிலாய்
அழகாய் ஆடினாள்...

காதலெனும் யாழெடுத்து
காமத்தையும் அதிலடக்கி
மீட்டினேன் மீராவாய்
முகுந்தனை யாசித்து...

கோகுலக் கண்ணன்
கோபியருடன் விளையாடி...
மீராவை மறந்தானோ
மீட்டிடும் இசையை கேளானோ?...

வாடா கண்ணா...
வந்தென்னை வசந்தமாக்கடாயென
ஆண் மீராவாய்
பெண் கிருட்டிணனை வேண்ட...

பதிலுரைக்காமல் கடந்தாள்...
பார்வையை விட்டு சென்றாள்...
கிழிந்த முகிலோ
கொட்டித் தீர்த்தது மழையை...

மழை விளக்கியது
என் மனதின் வலியையும்...
நிலவின் கோபத்தையும்...
ஒரே நேரத்தில்

மதியும் கலங்கியதே...
மனதும் குழம்பியதே...
மீட்டிட வருவாயோ...
மீண்டுமொரு முறை

யாழெனயெனை மீட்டி
யாதுமாய் நிறைவாயோ...
வாழ்ந்திட வருவாயோ...
வருந்திய மனதிற்கு

மருந்தாய் வருவாயோ...
மகிழ்ச்சியை அதனுள்
தெளித்து செல்வாயோ...
தேனாய் இனிப்பாயோ...

சிரித்து கடந்தவளே...
சிந்தையுனுள் சிலையாய் நின்றவளே...
மீண்டுமொரு முறை
மீள்பதிவாய் என்னுள் வா...

- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO #TAMIL

அன்புடன் வாழ்த்துகிறேன்...

கொஞ்சிப் பேசி
கோபியரை மயக்கி
கோகுலத்தில் வசிக்கும்
கிருஷ்ணன்போல் அவள்

சிரிப்பில் மயக்கி
சிந்தனையை குருடாக்கி
சிங்கார அழகில்
சிலிர்க்கச் செய்வாள்

தவழ்ந்து வந்து
தாவி எறி
மனதில் புகுந்து
மாயாஜாலம் காட்டுவாள்

மழலை மொழியில்
மாமாயென்று அழைத்து
இரு பல் அழகில்
இன்புற்று சிரிப்பாள்பார்த்துச் சென்றால்
பாரை மறக்கச் செய்வாள்
காணாமல் சென்றால்
கண்ணீரால் அழைப்பாள்

கண்சிமிட்டி மகிழ்ந்து
கட்டி அணைத்து
காலத்தை மறக்கடித்து
கவலையை எரித்திடுவாள்

மாரோடு சாய்ந்து
மனதை வருடி
இதயத்தினுள் சிம்மாசனமிட்டு
ஏகமாய் வியாபிப்பாள்

மடியில் புரண்டு
மொட்டு விரலால்
நெஞ்சைப் பிளந்து
நெகிழச் செய்வாள்

அழுது வடிவாள்
அதிகாரம் செய்வாள்
அன்பை ஊட்டுவாள் - இறுதியில்
அம்மாவாய் மாற்றுவாள்

துவாரகையில் வசித்த
கிருஷ்ணன் இன்று
துவாரகா வடிவில்
முதலாம் அகவையை தொடுகிறாள்
அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்

- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO

'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!
     
'வானவல்லி' நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். 'வானவல்லி'க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். 'ஆகட்டும்' என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை 'வானவல்லி' வெளியானதும் தருகிறேன் என்று கூறினார்.

அத்துடன் 'நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.' என்று ஆலோசனையும் கொடுத்தார்.

தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதோ இப்போது 'வானவல்லி' என் வாசிப்பில்... எனது நேர்காணலுக்கு நண்பர் வெற்றி பதில் அனுப்பி மின்னஞ்சலில் காத்துக் கிடந்தது. தற்போது உங்கள் பார்வைக்கு... நண்பர் வெற்றிக்கு மிக்க நன்றி!

* "வானவல்லி" எந்தக்காலகட்டம் முதல் எந்தக் காலகட்டம் வரை கூறுகிறது?

---> வானவல்லி கி.மு இரண்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. சரியாகக் கூற வேண்டும் என்றால் கி.மு 175 ல் கரிகாலன் எதிரிகளால் சிறைவைக்கப்பட்ட பிறகு கதை தொடங்கும். அதன் பிறகு கரிகாலன் எதிரிகளின் சிறையிலிருந்து எப்படி மீள்கிறான். வெண்ணிப் போரில் அனைவரையும் தோற்கடித்து அவனது அரியாசனத்தை மீட்ட பிறகு, இமயம் வரை படையெடுத்துச் செல்லும் சுமார் பத்து வருட காலமே வானவல்லியின் கால கட்டம்.

* புதினத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவையா?

---> புதினம் என்றாலே புனைவு என்று தான் பொருள். அப்படியிருக்கையில் வரலாற்றுப் புதினத்தில் வரும் அனைத்து நிகழ்வுகளும் எப்படி உண்மையாக இருக்கும். கரிகாலனைப் பற்றிய சரித்திரத் தகவல்கள் அனைத்தும் உண்மை. ஆனால், அந்த நிகழ்வுகள் எப்படி நடந்திருக்கும் என்பதில் எனது கற்பனையைப் புகுத்தி நாவலை புனைந்திருக்கிறேன். ஆனாலும், புதினத்தை வாசித்தவர்களிடம் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சோழ இளவரசன் வளவனை அவனது எதிரிகள் சிறை பிடித்து மாளிகையில் எரித்து உயிரோடு எரிக்க முயன்றார்கள். அப்போது அவனது கால்கள் தீயில் வெந்து கருகியது. ஆதலால் தான் அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். இது வரலாற்று நிகழ்வு. இந்த சிறைபிடித்து, அவன் தப்பித்த முறை என நான் எழுதியவை அனைத்தும் எனது கற்பனையே.

* வரலாற்றுப் புதினம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் எப்படி வந்தது?

---> இந்தக் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பா. ஆனால், எனக்குத் தான் சரியான பதிலை எப்படி அளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு சரித்திரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் சிறு வயதில் என்னைத் தோளில் போட்டுக்கொண்டு எனது தாத்தா கூறிய ராசா கதைகள் கூட காரணமாக இருக்கலாம். சோழர்களின் வீரம் எனக்கு மிகவும் பிடிக்கும். சோழ நாட்டான் நான் என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

* "வானவல்லி" பொன்னியின் செல்வன் போன்ற ஏதேனும் ஒரு வரலாற்றுப் புதினத்தின் தொடர்ச்சியா?

---> நிச்சயமாக இல்லை. தமிழ் வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் பிற்கால சோழர்களைப் பற்றி பல புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராஜ ராஜன் மற்றும் இராஜேந்திரன். ஆனால், முற்கால சோழர்களான கரிகாலன், இளஞ்சேட் சென்னி, கிள்ளி வளவன், செம்பியன் எனும் சிபிச் சோழன் போன்ற முற்கால மன்னர்களைப் பற்றிய வரலாற்றுப் புதினங்கள் மிகவும் சொற்பம். அந்த சொற்பத்தில் ஒன்று வானவல்லி. வானவல்லிக்கு முந்தைய கதையை இப்போது நான் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பெயர் வென்வேல்  சென்னி. கரிகாலனின் தந்தையின் வரலாறு. எதிர்காலத்தில் கூறப்படலாம் வென்வேல் சென்னியின் தொடர்ச்சி வானவல்லி என்று.* "வானவல்லி"யின் காலகட்டத்தை குறிப்பிடும் வரலாற்றுப் புதினங்கள் ஏதேனும் உள்ளனவா?

---> ஒரே ஒரு புதினம் மட்டும் இருக்கிறது. சாண்டில்யன் அவர்களின் யவன ராணி. அதுவும் கரிகாலனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் கரிகாலன் எனும் ஒரே தளத்தை அடிப்படையாகக் கொண்டது. யவனராணி கரிகாலனின் வெண்ணிப்போர் வரை முடிந்துவிடும். வானவல்லி கரிகாலனின் இலங்கைப் போர், காவேரிக்கு அணை எடுத்தது, அவனது இமய போர் வரைத் தொடரும்.

* இது உங்கள் வயதுக்கு மீறிய முயற்சி என்று சொன்னால்?

---> வயதுக்கு மீறிய முயற்சி என்று எதுவுமே இல்லை நண்பா. அனைத்துமே நமது முயற்சியில் தான் இருக்கிறது. என்னைக் கேட்டால் இதுவே தாமதம் என்றுதான் கூறுவேன்.

* கள ஆய்வு செய்திருக்கிறீர்களா?

---> செய்திருக்கிறேன். உறைந்தை (உறையூர்), புகார், கல்லணை என்று திரிந்திருக்கிறேன். 2200 வருட கால மாற்றத்தால் அனைத்தும் மாறிக் கிடக்கிறது. முக்கொம்பிலிருந்து கல்லணை வரை நடந்தே சென்றிருக்கிறேன். பட்டினப்பாலை கூறும் புகாரின் வளத்தைக் கேட்டு எதுவுமே இல்லாத புகார் கடற்கரையில் நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன்.

* இதில் உங்களுக்கு உதவி செய்தவர்களைப் பற்றி?

---> தொடக்கத்தில் நிறைய நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். உதவியவர்கள் என்று எடுத்துக் கொண்டாள் நண்பர் திரு.சுந்தர் கிருஷ்ணன் மற்றும் சோழகங்கம் ஆசிரியர் சக்தி ஸ்ரீ  அவர்களின் உதவி அளப்பரியது. சுந்தர் அண்ணன்தான் பிழை திருத்தம் செய்ததில் இருந்து பதிப்பாளரிடம் பேசி புத்தகம் வெளியாகும் வரை உதவி செய்தவர். வரலாற்றுத் தகவல்களில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் தெளிவு படுத்தியவர் சக்தி ஸ்ரீ. இந்த இருவரும் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். இருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

* யார் இந்த "வானவல்லி"? - உண்மையை சொல்லுங்க.

---> வானவல்லி என்பவள் சோழப் படைத் தலைவனின் காதலி. வேளக்காரப் படைத் தலைவனின் தங்கை. கரிகாலருக்கு அக்கா. மாற்றத்தை வானவல்லி படிக்கும்போது தெரிந்துகொள்ளவுங்கள்.


* புத்தக வெளியீட்டில் இலாபமீட்ட முடியுமா?


---> இது பதிப்பகத்தாரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

* புதிதாக நூல் வெளியிட விரும்பும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரை?

---> முடிந்த வரை பதிப்பகம் வழியாக வெளியிடுவது சிறந்தது. அவர்களால் மட்டுமே வாசகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்க இயலும்.

* "வானவல்லி"க்கு உங்கள் வீட்டாரின் பிரதிபலிப்பு என்ன?

---> வானவல்லி எழுதத் தொடங்கிய காலத்தில் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேலைக்குச் செல்லாமல் மணிக் கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து உணவில்லாமல் எழுதிக் கொண்டிருந்தால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்? போகப் போக எனது உணர்வுகளை வீட்டில் புரிந்துகொண்டார்கள். வானவல்லி வெளியான போது என்னை விட வீட்டில் தான் அதிக மகிழ்ச்சி. இப்போது எழுதுகிறேன் என்று கூறினாலே அவர்கள் என்னை தொந்தரவு செய்வதில்லை.

* வலைத்தளத்தில் "வானவல்லி" இடை நிறுத்தப்படக் காரணம்?

---> நான் எழுதியதை பலர் அவர்களின் தளத்தில் வெளியிட்டு அவர்களின் பெயரைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தகம் வெளியாகும் நேரத்தில் அவர்களால் எந்த இடையூறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் பாதியில் நிறுத்தி விட்டேன்.

* "வானவல்லி"க்காக நீங்கள்   சந்தித்த சவால்கள் என்ன?

----> இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதைக் களம் என்பதால் அக்காலம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை முறை, அரசியல், போர், போரியல் கருவிகள் ஆகியவற்றை அறிவதில் பெருத்த சவால்களை சந்தித்தேன். வானவல்லி கதைக்களங்களை நேரில் பார்க்க புகார், கல்லணை, உறையூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். ஆனால், கால மாற்றத்தில் பல மாற்றங்களை சந்தித்து வரலாற்றுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனும் ரீதியில் நின்றுகொண்டிருந்தன. அப்பகுதிகளைக் காணும்போது நானாகவே  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயணித்து இந்தப் பகுதிகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன். தினமும் தொடர்ந்து எழுதியதால் எப்படி இரண்டாயிரம் பக்கங்களைக் கடந்தேன் என்று தெரியவில்லை. தகவல்களை திரட்டுவது தான் பெருத்த சவால்களாக இருந்தது. தகவல்கள் கிடைத்ததும், அதை கதையுடன் இணைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

                                                          **********
நண்பர் வெற்றிவேல் தற்போது மற்றுமொரு புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அது தொடர்பான நேர்காணலும் நமது தளத்தில் வெளியாகும். காத்திருங்கள்!

இந்த நேர்காணலானது 08-10-2016 அன்று 'சிகரம்' வலைத்தளத்தில் வெளியானதாகும். 'சிகரம்' வலைத்தளத்துக்காக நேர்கண்டவர் 'சிகரம் பாரதி'

நன்றி!

#VAANAVALLI #NOVEL #HISTORICALNOVEL #READING #READ4BESTLIFE

Popular Posts