மனம் குளிர...

விழுந்த திரை விலகுமோ
விடியல் எனை நெருங்குமோ
வீதியிலே வந்த நிலவு
வீட்டி னுள்ளும் காயுமோ
சிந்தையிலே பழுது என்றால்
சீர்தூக்கிப் பார்த்திடு வோம்
சிறுதவறு என் றறிந்தால்
சிந்தித்து மறந்திடு வோம்

வெந்தசோறு ஒரு பருக்கை
போதாதோ
பதமறிய
வெண்ணிலவின் ஒருகீற்று
போதாதோ மனம் குளிர!

--கி.பாலாஜி
13.03.2017

இக்கவிதை கவிஞர் பாலாஜி அவர்களின் படைப்பாகும்

Comments